பதிலடி வழங்குவோம் – உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடுத்துள்ளது. பல நகரங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்து வெற்றிகொள்வோம் என உக்ரைன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிமிற்றோ குலேபா தெரிவித்துள்ளார்.

டிமிற்றோ குலேபா தனது டுவீட்டர் சமூக வலைத் தளத்தினூடாக இத்தகவலை உலகிற்கு தெரிவித்துள்ளார். உலக நாடுகள் புடினின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், அது உலக நாடுகளால் முடியும் எனவும் தெரிவித்த குலேபா, தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles