உதயங்க வீரதுங்க கைது, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

ரஷ்யவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உதயங்காவை வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2006ம் ஆண்டு இடம்பெற்ற ‘மிக்’ரக போர் விமான கொள்வனவின்போது 14 மில்லியன் டொலர்கள் மோசடி செய்தார் என உதயங்க வீரதுங்க மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய  2016ம் ஆண்டு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டு, சர்வதேச காவல்துறையின் (INTERPOL) உதவியும் கோரப்பட்டிருந்தநிலையில், உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் இடம்பெற்ற மருத்துவ பரிசோதனையை அடுத்து அவர் சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில், அரசியல்வாதிகளோ அல்லது பிரபலமானவர்களோ சிறையில் அடைக்கப்பட்டால், ஏதோ ஒரு வகையில் சிறைவாசத்தை தவிர்க்க, இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதியாகும் நிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles