நாலக டி சில்வா கைது

பயங்கரவாத தடுப்பு பிரிவின் (TID) முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை குற்றப் புலனாய்வு பிரிவினர் (CID) கைது செய்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாலக டி சில்வாவை வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ​மைத்திரிபால சிறிசேனா ​மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ​கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைக் ​கொலை​ செய்ய ​ திட்ட​மிட்டமை​ தொடர்பில்​, ​நாலக டி சில்வாவை​ ​குற்றப் புலனாய்வு பிரிவினர்​ தொடர்ச்சியாக விசாரனை செய்துவந்தமை குறிப்பிடத்தக்கது.​

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles