வவுனியா பிரஜைகள் குழுத் தலைவரை விசாரணைக்கு அழைக்கும் TID

நல்லாட்சி அரசிலும் தொடரும் மிரட்டல்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது?

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் வடபகுதி இணைப்பாளராக செயற்பட்டு வருகின்ற வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் காரணங்கள் எதுவும் கூறப்படாமல் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு மிரட்டும் பாணியிலான செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.

மகிந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழர்களின் உறவினர்களால் நடத்தப்படும் போராட்டங்களை இலங்கை இராணுவ புலனாய்வுப்பிரிவினர் ஏதோ ஒரு வகையில் குழப்ப முயற்சிக்கிறார்கள்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் அமையப்பெற்ற நல்லாட்சி அரசினால் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் உறவுகளும் புலனாய்வுப்பிரிவினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார் இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை, வவுனியாவில் நடத்தப்பட்டுவரும் போராட்டம் மற்றும் விசாரணைகளில் மக்கள் சாட்சியமளிப்பதை முற்றாக நிறுத்துவதற்குரிய ஒரு செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

Latest articles

Similar articles