உடுவிலில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

உடுவில் ஆலடி பிரதேசத்தில் நேற்று (04/02) இரவு வீடொன்றினுள் வாள்களுடன் புகுந்த காவாலிகள், உடமைகளுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். 

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குபேர், வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியத்துடன், வீட்டில் நின்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் தீக்கிரையாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

யாழில் வாள்வெட்டுக் குழுக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக வடமாகாண காவல்துறை மா அதிபர் ஊடகங்களுக்கு அறிவித்த 48 மணி நேரத்தில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...