மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..

சிங்கள-தமிழ் புத்தாண்டை விடுமுறையை அடுத்து இன்று(19/4) பாராளுமன்றம் மீண்டும் கூடியது. பிரதமர் மகிந்தவும் பிரசன்னமாகியிருந்தார்.

இன்றைய அமர்வில், இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் சில பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட, 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

நேற்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் பல பகுதிகளில் மக்களினால் மீண்டும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து, பல இடங்களில் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles