மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? 🎥

கொழும்பு துறைமுகத்தினூடாக விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மர்ம கொள்கலனில் ராஜபக்ச குடும்பத்தினரின் பெருந்தொகை தங்கமும், பணமும் (டொலர்களாக) இருந்திருக்கலாம். அல்லது அவண்ட் கார்ட் நிறுவத்தின் சட்டவிரோத ஆயுதங்கள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் கொள்கலனிற்கு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், விசேட அதிரடிப்படையினர் கொள்கலனைச் சூழ்ந்து கடும் பாதுகாப்பு வழங்குவது தெளிவாகத் தெரிகிறது.

இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்படி கொள்கலனில் முகக் கவசங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் C-188 Cobalt-60 கதிரியக்கப் பொருட்கள் இருந்ததாகவும், அதை கனடாவிற்கு திருப்பி அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தின் தீவிரத் தன்மையப் புரிந்து கொண்டுள்ள ராஜபக்ச சகோதரர்கள், மக்களை மறந்து தம்மைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கிவிட்டார்கள்.

ராஜபக்ச சகோதரர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் பலர் நாட்டை விட்டு ஏற்கனவே தப்பி ஓடியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க ஒருவர் நிசங்க சேனாதிபதி. சர்வதேச சட்டவிரோத கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய இவரை, இலங்கையில் ராஜாபோல் இருக்க பாதுக்காப்பையும், வசதிகளையும் வழங்கியவர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச என்பது அப்பாவி சிங்கள மக்களைத் தவிர ஏனையோருக்குத் தெரியும்.

மேலும் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பின்னர், தமிழர் தாயகத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் என்பன இதேபோன்று ஒரு சில கொள்கலன்களில் கடும் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டிருந்தது என்பதும் இங்கே நினைவூட்டப்படவேண்டியுள்ளது.

Latest articles

Similar articles