இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் முகக் கவசம் அணிதல் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பொதுப்போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தளர்த்தபடும் கோவிட் கட்டுப்பாடுகளாவன,
1-பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.
2-அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் உள் நுழையும்போது உடல் வெப்பநிலை பரிசோதித்தல் அவசியமில்லை.
3-அலுவலகங்கள் மற்றும் வளாகங்களிற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் விபரங்கள் பெறுதல் அவசியமில்லை.
