இலங்கை வரும் இத்தாலி, ஈரான், தென் கொரியா பயணிகளுக்கான அறிவித்தல்

இலங்கை வரும் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாட்டு பயணிகளை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரித்துள்ளது

சீனாவில் கடுமையாகப் பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஈரானில் 66பேரும், இத்தாலியில் 52பேரும், தென்கொரியாவில் 28பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.
இலங்கை எடுத்துள்ள இந்த சிறப்பான முடிவினால், கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்தலாம். இதேபோன்று மற்றைய நாடுகளும் இறுக்கமான நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால், கொரோனா வைரஸின் ஆட்டத்தை முடிவிற்கு கொண்டுவரலாம் என்பதை உலக நாடுகள் உணரவேண்டும்.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை (03/03/20, 2 PM IST) ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.

உயிரிழப்பு : 3125

பாதிக்கப்பட்டோர்
  • சீனா  – 80,152
  • தென் கொரியா – 5186
  • இத்தாலி – 2036
  • ஈரான் – 1501
  • ஜப்பான் – 980
  • (f)பிரான்ஸ் – 191
  • ஜேர்மனி – 165
  • ஸ்பெய்ன் – 120
  • சிங்கப்பூர் – 108
  • ஹொங்கொங் – 100
  • அமெரிக்கா – 103
  • குவைத் – 56
  • பஹ்ரெய்ன் – 49
  • தாய்லாந்து – 43
  • தாய்வான் – 41
  • ஐக்கிய ராச்சியம் (UK) – 40
  • ஆஸ்திரேலியா – 34
  • சுவிற்சர்லாந்து – 30
  • மலேசியா – 29
  • கனடா – 27
  • ஈராக் – 26

Latest articles

Similar articles