கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு

இலங்கை குடிவரவு-குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று(17/11) முதல் அமுலிற்கு வருகிறது.

சாதாரண கடவுச்சீட்டிற்கான கட்டணம் 1,500 ருபாவினாலும், ஒருநாள் சேவைக்கான கட்டணம் 5,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சாதாரண கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய கட்டணம் 5,000 ரூபாய் ஆகும்.
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய கட்டணம் 20,000 ரூபாய் ஆகும்.

இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கான தகவல்களை காண இங்கே அழுத்தவும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles