பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, நவம்பர் 14ல் பொதுத் தேர்தல்

இலங்கை பாராளுமன்றம் ஜனாதிபதி அநுர குமார திசாநாய்க்கவினால் கலைகப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியினூடாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி (14/11/2024) பொதுத் தேர்தல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் 21ம் திகதி (21/11/24) புதிய பாராளுமன்றம் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ம் திகதி முதல் 11 திகதிவரை (04/10/24 – 11/10/240 நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles