ஜனாதிபதியின் அதிகாரங்களை வலுவூட்டும் 20வது திருத்தம்

இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் 20வது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனநாயக நாட்டில் தேர்தல் மூலம் மக்களினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி, சர்வாதிகாரமிக்க ஜனாதிபதியாக மாறுவதற்க்கு 20வது திருத்தச் சட்டம் இடமளிக்கப்போகின்றது.

குறிப்பாக பின்வரும் திருத்தங்கள் இலங்கையின் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குவதாக அமையப்பெற்றுள்ளன,
– நாடாளுமன்றத்தை ஒரு வருட காலத்தில் கலைக்க முடியும்
– ஜனாதிபதிக்கெதிராக எவரும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.
– பிரதமரை நியமிக்கும் அதிகாரம்
– பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் சட்டமா அதிபரை நியமிக்கும் அதிகாரம்
– இரட்டைக் குடியுரிமையுள்ளோர் தேர்தலில் போட்டியிடலாம்

மக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை, ஒரு வருடத்தில் ஜனாதிபதியினால் கலைக்கமுடியுமாயின், அந்த நாடு ஜனநாயக நாடாக இருக்க வாய்ப்பில்லை. நீதித் துறையிலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுமாயின், ஒருபோதும் நீதியினை எதிர்பார்க்க முடியாது.

20வது திருத்தச் சட்டம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மிகவும் பலப்படுத்துவது மட்டுமன்றி, ராஜபக்ச குடும்பத்தினை முழுமையாகப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

Latest articles

Similar articles