தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 443பேர் உயிரிழப்பு

கடந்த சில நாட்களாக தென்னாபிரிக்காவின் குவாசுலு-நாடல் மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இதுவரை 443பேர் உயிரிழந்து, பலர் காணாமல் போயுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தென் ஆபிரிக்காவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான டர்பன் துறைமுகத்தின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles