இலங்கையின் விமானப் படைத்தளபதியான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராஜாங்க அமைச்சரான ஜானக வக்கும்புரவிற்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் முன்னாள் காவல்துறை பேச்சாளரான அஜித் ரோகணவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவினால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளது.