இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம்காணப்பட்டார்

இலங்கையில் இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம் காணப்பட்டுள்ளார்.

இவரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த நபராவார். இவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

ஏற்கனவே கடந்த வாரம் முதலாவது குரங்கு அம்மை நோயாளி இலங்கையில் இனம் காணப்பட்டிருந்தார். இவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குரங்கு அம்மை நோய், பெரியம்மை மற்றும் சின்னம்மை போன்றவற்றிற்கிடையிலுள்ள ஒரு வைரசினால் ஏற்படுகின்றது என குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்குரிய தடுப்பூசி இலங்கையில் இல்லை எனவும் தெரிவித்துள்ள மருத்துவர், அடிப்படை சுகாதார வழிகாட்டல்களைப் பேணுவது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலுடன் கூடிய கடி(சொறி), தோல் புண் போன்ற அறிகுறிகள் இருப்பின் வைத்தியசாலையை உடனடியாக நாட வேண்டுமெனவும் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles