ரஷ்யாவில் நடைபெறவிருந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்த அமெரிக்கா

அமெரிக்காவின் CIA அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் நடைபெறவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை நடாத்த திட்டமிடப்பட்டிருந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் திட்டத்துடன் தொடர்புடைய ஏழு இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், பெருமளவிலான வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் தகவலின்படி, தாக்குதலுக்கு முன்னர், பல பொதுமக்களை கைதிகளாப் பிடித்து பாரிய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியிருக்கக்கூடியதாக இத்தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்திருக்கலாம் என அறியப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles