ரஞ்சன் ராமநாயக்கா விடுதலையாகும் சாத்தியம்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பெரும் குற்றச் செயல்களை மேற்கொண்ட பலர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ரஞ்சன் ராமநாயக்காவை விடுவிப்பதற்கான வேண்டுகோள் நியாயமானது எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுள்ளபடியால், ஜனாதிபதியுடன் பேசி ரஞ்சன் ராமநாயக்காவை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், வெளிப்படையாகவே ராஜபக்சவினர் மேற்கொண்ட குற்றங்களை சுட்டிக் காட்டிய முக்கிய நபர் ரஞ்சன் ராமநாயக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles