மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் அர்ஜுன் அலோசியஸ்

இலங்கை மத்தியவங்கி பிணைமுறியுடன் தொடர்புடைவர் என பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த அர்ஜுன் அலோசியஸ் மஹிந்தவின் புதல்வரின் திருமண நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியவங்கி பிணைமுறியில் ஐக்கிய தேசியக் கட்சி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது என மஹிந்த தரப்பிலான கூட்டு எதிரணி கடுமையாக குற்றம் சுமத்தியும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டுவரும்நிலையில், அர்ஜுன் அலோசியஸ் திருமண நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை கொழும்பு அரசியலில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

2014 இற்கு முன்னரான மஹிந்த ஆட்சியில் இலங்கை மத்திய வங்கி பல பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த ஆட்சிக் காலத்திலேயே அவர்களின் ஊழல்களை பாராளுமன்றத்தில் துணிவுடன் வெளிப்படுத்தியவர் ரஞ்சன் ராமநாயக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...