புடினின் அறிவிப்பால் அதிர்ந்த உலகம்

ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடினின் அறிவிப்பால் உலகமே அதிர்ந்துள்ளது.

தனது நாட்டின் அணு ஆயுதப் படையணியை உஷார் நிலையில் இருக்கும்படி விளாமிடிர் புடின் அறிவுறித்தியுள்ளார். இந்த அறிவிப்பு முழு உலகையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலக நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது விதித்துள்ள தடைகள் மற்றும் வங்கிகளின் முடக்கம் போன்றவற்றால் ரஷ்யா பாரிய பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளும். மேலும் ஐரோப்பிய நாடுகள் தமது வான் பரப்பில் ரஷ்ய விமானகள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளதுடன், ரஷ்ய நாட்டு ஊடகங்களையும் தடுத்துள்ளன.

இதனால் விரக்தியடைந்த ரஷ்ய அதிபர், இவ்வாறான அணு ஆயுத படைகள் தொடர்பாக அறிவுப்புகளை விடுப்பதாகவும் மேற்கத்தேய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles