அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(25/04) சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கின்றனர். இதனால் அதிபர்கள், ஆசிரியர்கள் எவரும் பாடசாலைக்குச் சமூகமளிக்க மாட்டார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்மொழிவுகளை கல்வி அமைச்சு நிராகரித்தமை மற்றும் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமை போன்ற காரணங்களை முன்வைத்து இன்று இந்த சுகயீனப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரித்த பேருந்துக் கட்டணம் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களின் கட்டண உயர்வால் மாணவர்களின் வரவு பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கல்வித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் நடக்கவிருக்கும் சுகயீனப் போராட்டம், வரும் நாட்களில் நீண்ட நாட்கள் மேற்கொள்ளப்படும் ஐயப்பாடுகளும் காணப்படுகின்றன.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles