அனைத்து மாகாண சபைகளுக்கும் பழைய முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி பிரேரணை

இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான விசேட பிரேரணையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அமைச்சவரையிடம் சமர்ப்பித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக, ஒரேநாளில் தேர்தலை நடத்துவது பற்றியும் ஜனாதிபதி யோசனையை முன்வைத்துள்ளார். 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துடன் வரும் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என்றும் அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த விசேட பிரேரணை அடுத்த  அமைச்சரவைக்  கூட்டத்தின்போது கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...