இலங்கையில் நோர்வே தூதரகம் மூடப்படுகிறது

இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் 2023 ஜூலை மாதம் மூடுப்படவுள்ளதாக நோர்வே வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தூதரக கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ள நோர்வே, மொத்தமாக ஐந்து தூதரகங்களை மூடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை (கொழும்பு), ஸ்லோவாக்கியா (பிராடிஸ்லாவா), கொசோவா (பிரிஸ்டீனா), மடகாஸ்கார் (அண்டானாரிவோ) நாடுகளில் அமைந்துள்ள தூதுரகங்களும், மற்றும் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள இணைத்தூதரகமும் மூடப்படுவதாக நோர்வே வெளிவிககார அமைச்சு தெரிவித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles