வரலாற்று சிறப்புமிக்க வட கொரிய – தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் நேற்று (27/04) சந்தித்தமை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.

1951ம் ஆண்டிற்கு பின்னர் தென் கொரியாவிற்கு விஜயம் செய்யும் முதலாவது வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆவார். கடந்த 10 வருடங்களில் வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையில் நடந்த முதல் சந்திப்பு இதுவாகும்.

North korea kim jong un South korea moon jae

இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

இருநாட்டு தலைவர்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  • இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளை நிறுத்துவது.
  • இரு நாடுகளை பிரிக்கும் ராணுவமயமற்ற பகுதியில், பிரச்சார ஒலிபெருக்கிகளை நிறுத்துவதன் மூலம் இப்பகுதியை அமைதி பகுதியாக மாற்றுவது.
  • அமெரிக்க மற்றும் சீனாவை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது.
  • போரினால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் ஒருங்கிணைத்தல்.
    எல்லைகளை ரயில் மற்றும் சாலைகள் மூலம் இணைத்தல் மற்றும் நவீனமயப்படுத்துதல்.
  • இந்த வருடம் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட, விளையாட்டு போட்டிகளில் கூட்டாக பங்கேற்பு.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles