பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்தார்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கத்திரினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பரிசுத்த பாப்பரசரை வத்திக்கானில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கையில் ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற மனிதப் பேரவலத்திற்கு இன்னும் நீதி கிடைக்காமை, அது தொடர்பான விளக்கங்கள் மற்றும் இலங்கையில் கத்தோலிக்கர்களின் நிலமை தொடர்பாக  ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பரிசுத்த பாப்பரசரருடன் உரையாடியுள்ளார். மேலும் வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் திருப்பலி பூஜையையும் நடத்தியுள்ளார்.

இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களில் இடம்பெற்ற தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 260 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர்.

இந்த தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் (நல்லாட்சி அரசு உட்பட) எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் இதுவரை எடுத்திருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles