மகிந்த ஆட்சியில் அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் !

கடந்த ஆட்சியில், அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புகளினால், நீதிமன்றங்களினால் முறையாக விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலமை இருந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று (29/01) ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலாவது சட்டமான அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஊழல், மோசடிக் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு சட்டம் அங்கீகரிக்கப்பட்டு தற்போது 23 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் இவ்வளவு காலமும் குறித்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நான்கு பேரே குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விசாரணை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள இடமளிக்காமையே இதற்கு முக்கிய காரணம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles