பொதுமக்களுக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார் – மகிந்த

‘மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாது’ என சில நூற்றுக்கணக்கான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அலரிமாளிகையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மத்தியில் பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறிது நேரம் உரையாற்றினார்.

பொதுமக்களுக்காக எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்காகவும், எந்தவொரு அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள நான் தயார்” என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பதவி விலகுவது உறுதியாகியுள்ளது.

இதேவேளை, இங்கு பேசிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ மகிந்த பதவி விலகினால் அரசியல் நெருக்கடி ஏற்படும் எனத் தெரிவித்தார்.

அலரிமாளிகைக்கு முன்னால் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles