இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில், இந்த தேர்தலில் தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம் என நம்பிக்கை வெளியிட்டார்.

அவ்வாறு பெறமுடியாமல் போனால், அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். மேலும், நாம் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாம் ஏற்கனவே இதனிலும் பார்க்க கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளோம் என்று மகிந்த தெரிவித்தார்.