அன்று போர்க் குற்றவாளி, இன்று ஜனநாயகக் குற்றவாளி

2009 இறுதிப்போரில் 40,000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் போர்க்குற்றவாளியாக இனம்காணப்பட்ட காணப்பட்ட மகிந்த ராஜபக்ச, இன்று 2018ல் அதிகார மோகத்தில், தனது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களை ஏவி, சபாநாயகரையே கதிரைகொண்டு தாக்குவதன் மூலம் ஜனநாயகக் குற்றவாளியாக இனம்காணப்பட்டுள்ளார்.

மொத்தத்தில் ஒரு சர்வாதிகாரி செய்யக்கூடிய அனைத்து அராஜகங்களையும் மகிந்த ராஜபக்ச இலங்கை மக்களுக்கு செய்து காட்டிக்கொண்டிருக்கிறார்.

40 வருட அரசியல் அனுபவம், ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இருந்த எனக்கு பதவி ஆசை இல்லை என்று சொல்லும் அவர், மறுபக்கத்தில் தனது சர்வாதிகாரத்தை ஏதோ ஒருவகையில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

சீன அரசின் பின்பலத்துடன், சீனாவில் இடம்பெறும் ஆட்சியைப்போன்று, ஒருவரே சாகும்வரை நாட்டின் தலைவராக இருக்கும் முறையை இலங்கையில் உருவாக்கி, தானே சாகும்வரை நாட்டை ஆழ நினைக்கும் மகிந்தவின் எண்ணம் நிறைவேறுமா இல்லையா என்று இந்தியாவும், மேற்குலக நாடுகளும்தான் முடிவெடுக்கவேண்டும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles