கோத்தா-ரணில் சதிகார அரசை விரட்டுவோம் – IUSF

“கோத்தா – ரணில் சதிகார அரசாங்கத்தை விரட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால்(IUSF) நேற்று(19/05) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று கொழும்பில் நடத்தப்பட்டது.

பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை காவல்துறையினர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை கையளிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் மாணவர்களின் கடும் எதிர்ப்பினால் அது நடைபெறவில்லை.

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முயன்றபோது, மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது,

அவசரகால சட்டம் அமுலில் உள்ளபோது மாணவர்கள் துணிவாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles