கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது முதியவர்

கொரோனாவின் தாக்கதினால் பெரும் உயிர்ச்சேதங்களைச் சந்தித்துவரும் இத்தாலியில் ஒரு சிறு ஆறுதலான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் கிழக்கு நகரான் ரிமினியில் 101 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளார். கொரோனா தொற்றினால் கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று முன் தினம் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாய ரிமினி நகரனின் உதவி மேயர் கருத்து தெரிவிக்கையில், இந்த நிகழ்வு எல்லோருக்கும் எதிர்காலத்திற்குரிய ஒரு நம்பிக்கையைக் குடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுவரையில் (28/03) இத்தாலியில் 86,498பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன், 9134பேர் உயிரிழந்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles