இந்தோனேசியாவில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 832 ஆக உயர்வு

கடந்த வெள்ளியன்று (28/09) இந்தோனிசியாவில் இடம்பெற்ற பூகம்பம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்னிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய அனர்த்த நிலைய அதிகாரி கருத்து தெரிவிக்கையில், 832 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். மேலும் பூகம்பத்தால் 6m (20 அடி) உயரம்வரை சுனாமி அலைகள் எழுந்ததாக குறிப்பிட்டார்.

இடர்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பல உடல்கள் இன்னும் வீதிகளில் சிதறிக்கிடப்பதுடன், காயப்பட்டவர்களுக்கு கூடாரங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...