ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை தமிழரசுக் கட்சியை வரும் செவ்வாய்க்கிழமை (15/03) சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக தமது கட்சி ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருந்ததாகவும், இறுதியில் வரும் செவ்வாய்க்கிழமை தம்மைச் சந்திக்க ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம்  இனப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணத் தவறுமாயின், இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு போதும் மீளக் கட்டியெழுப்ப முடியாது எனவும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles