மே மாதம் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் – ரணில்

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

இந்திய வழங்கிய கடன் – வரி (credit line) பயன்படுத்தப்பட்டு முடிவடையும்போது, இம்மாத இறுதியில் அல்லது மே மாதம் இரண்டாம் கிழமை மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியொரு நாடாக இலங்கைக்கு பெருமளவில் நிதி சம்பந்தமான உதவிகளை வழங்கிய இந்தியாவிடமிருந்து, மேலதிக உதவிகள் எதுவும் கிடைக்குமென தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles