டுவிட்டர் வலைத்தளத்தை முழுமையாக வாங்குகிறார் ஈலொன் மஸ்க்

உலகின் முதன்மைப் பணக்காரரான ஈலொன் மஸ்க் டுவிட்டர்(twitter) வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முழுமையாக வாங்குகிறார். இதன் மூலம் டுவிட்டர் தளத்தின் முழுமையான கட்டுப்பாட்டாளர் ஆகின்றார் ஈலொன் மஸ்க்.

உலகின் முதலாவது பணக்காரர் இருப்பினும், உலகிலுள்ள தொழிலதிபர்களிலேயே தனித்துவம் வாய்ந்தவர் ஈலொன் மஸ்க். வெளிப்படையாகவே தனது நிலைப்பாட்டினை உலகிற்கு சொல்பவர். இதுவரையில் 84.4 மில்லியன் மக்கள் இவரது டுவிட்டர் தளத்தை பின் தொடர்கின்றனர்.

2022 ஏப்ரல் மாதம்வரையில் ஈலொன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 273 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இவர் அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) போன்றவற்றின் கட்டுப்பாட்டாளர் ஆகவும் செயற்பட்டு வருகின்றார்.

சமூக வலைத் தளங்களில் முதன்மையான டுவிட்டர் தளத்தை, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாங்குவதற்கு பல வழிகளில் முயற்சி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவை