ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் – டொனால்ட் ட்ரம்ப்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விரைவில் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் உரிமை கொண்டாடிவரும் நிலையில், கடந்த அமெரிக்கத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த முடிவுகளை அறிவித்தார்.

வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “இந்த முறை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிறேன். எனக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்தவர்கள், இதை செய்வதாக வாக்குறுதி மட்டுமே அளித்தனர். ஆனால், செய்தது கிடையாது” என்றார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles