டெங்கு ஒழிப்பு வாரம் ஜீன் 15 முதல் 21 வரை

அதிகளவில் பரவிவரும் டெங்கு நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இம்மாதம் 15 முதல் 21 வரை (ஜீன் 15 – 21) விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த எட்டு நாட்களில் நாடு முழுவதும் 2,416 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதில் 51.2 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் மட்டும் இனம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவு டெங்கு பரவும் மாவட்டமாக கொழும்பு மாவட்டம் இனம் காணப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்கள் டெங்கு அபாயமுள்ள மாவட்டங்களாக இனம் காணப்பட்டுள்ளன.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles