பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை மா அதிபர் பதவி விலகல்

பிந்திய இணைப்பு :

காவல்துறை மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தானாக பதவி விலகாததினால் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார்.
பதில் காவல்துறை மா அதிபராக C.D.விக்ரமரத்னா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தி

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

புலனாய்வுப்பிரிவினருக்கு தகவல்கள் முன்னரே கிடைத்திருந்தும், அதனை உரிய முறையில் கையாளாமையினால் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 253பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதனைக் காரணம் காட்டி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இவர்களைப் பதவி விலகுமாறு கேட்டிருந்தார்.

இலங்கை புலனாய்வுப்பிரிவினரில் பல முஸ்லிம்கள் கடமையாற்றுகின்றனர் என்பதும், புலனாய்வுப்பிரிவினுள் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவின் செல்வாக்கு இன்னும் அதிகம் இருப்பதும் மறுக்கப்படமுடியாத உண்மையாகும்.

இவ்வாறு அரசியல்வாதிகளின் கையில் புலனாய்வுப்பிரிவு சிக்கித் தவிக்கும்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா பாதுகாப்புச் செயலாளரையும், காவல்துறை மா அதிபரையும் பதவி விலகுமாறு ஏன் கேட்டிருந்தார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles