கொரோனா தொற்றினால் 15மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO

கொரோனா தொற்று ஆரம்பித்த 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் 31ம் திகதிவரையில் உலகம் முழுவதும் 15 மில்லியன் வரையிலான மக்கள் கொரோனா தொற்றினால் இறந்துள்ளார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.

பெரும்பாலான தென் ஆசிய நாடுகளில் வெளியிடப்பட்ட உயிரிழப்புகளின் விபரங்கள், உத்தியோகபூர்வ உயிரிழப்புகளைக் காட்டிலும் அதிகமானதாகக் காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் 4.7 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இது இந்திய அரசு வெளியிட்ட உயிரிழப்பு எண்ணிக்கையிலும் பார்க்க பத்து மடங்கு அதிகம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா அதனை மறுத்துள்ள போதிலும், அங்கு கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Latest articles

Similar articles