3,333 தொற்றாளர்கள், 145பேர் உயிரிழப்பு

இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றினால் 145பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 3,333பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

முப்பது வயதிற்குட்பட்ட நால்வரும், முப்பது வயதிற்கும், 59 வயதிற்குமிடைப்பட்ட 24பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 117பேரும் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 9,951பேர் உயிரிழந்துள்ளார்கள்.

covid death srilanka 145

மேற்படி தரவுகள் இலங்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தரவுகள் ஆகும். இருப்பினும் உண்மையான உயிரிழப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகம் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தியா இலங்கைக்கு 150 மெற்றிக்தொன் ஒக்சிஜனை வழங்கி உதவியுள்ளது. சென்னை மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து இரு கப்பல்கள் ஏற்கனவே இலங்கையை அடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா அவசர உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles