நாமலிடம் CID விசாரணை

நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து வெளியேறிய பொதுஜன பெரமுணவின் காடையர்களினால் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம‘ தாக்கப்பட்டமை தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெறுகின்றன.

விசாரணைகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என நாமல் தெரிவித்துள்ளார்.

– ரணில் இருக்கப் பயமேன் –
2015 நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே தஜீதீனுடைய கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பிய நாமலுக்கு, தற்போதைய நிலையில் மிக இலகுவாக எல்லா விசாரணைகளில் இருந்தும் தப்பிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles