சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை

சீனாவின் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் சங்காய் நகரில் பரவியுள்ள கொரோனா தொற்றினால், சீன அரசாங்கம் கடும் முடக்கநிலையை அமுல்படுத்தியுள்ளது. மூன்று வாரங்களைத் தாண்டி தொடர்கின்ற முடக்கநிலையால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலைக்குப் பின்னர், இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் 20,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம்காணப்படுகின்றனர்.

பல கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல் பெரும் புள்ளிகள் வசிக்கும் சங்காய் நகரில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை வெறும் 38% மக்களே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார்கள்.

மேலும் சங்காய் நகரில் உணவு வழங்கல் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் உணவுக் கையிருப்பு குறைவடைந்து செல்வதாகவும், இணையவழி மூலம் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் மக்களை வந்தடைவதில் பெரும் தாமதம் நிலவுவதாகவும் அறிய முடிகின்றது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles