இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க நேற்று (18/12) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாகவே இவரது கைது இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இருப்பினும் சபாநாயகருக்கோ, நீதிவானுக்கோ அறிவிக்காமலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சம்பிக்கவை சஜித் பிரேமதாச நேரில் சென்று சந்தித்துள்ளார்.
