இலங்கை மத்திய வங்கி பிணை முறியால் அரசாங்கத்திற்கு 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு

மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03/01) மாலை விசேட உரையொன்றினை ஆற்றியிருந்தார்.

இலங்கை மத்திய வங்கி பிணை முறியால், அரசாங்கத்திற்கு குறித்த காலப் பகுதியில் 8.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபாயை, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் உறவினருக்கு சொந்தமான பேர்பச்சுவல் நிறுவனம் இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் செயற்பாடுகள் தொடர்பில், மத்திய வங்கி உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்ப முடியாது செயலிழந்து காணப்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜுன் மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோர் தொடர்பில் பிரதமர் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்ததாக குறிப்பிட்ட அவர், பிரதமர் அவ்வாறு நடந்திருக்ககூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest articles

Similar articles