புதினம்
Local news
யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட்
புதினம் -
யாழ் மாநகர சபை மேயராக திரு.இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (14/02) காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர், யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே ஆர்னோல்ட்தான் யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளர் என்று இருந்தபோதிலும், இடையில் ஏற்பட்ட சில வேண்டாத சலசலப்புக்களின் பின்னர்...
Soccer
ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணம், முதல் சுற்று போட்டி முடிவுகள்
புதினம் -
இன்று நடை பெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட முதற் சுற்று போட்டி முடிவுகள் ஜுவென்டஸ் vs டோட்டன்ஹாம் ஹோட்ஸ்பர் இன்று இத்தாலி டுரின் நகரில் நடைபெற்ற போட்டியில் இத்தாலி ஜுவென்டஸ் அணியும் இங்கிலாந்தின் டோட்டன்ஹாம் ஹோட்ஸ்பர் அணியும் தலா இரு கோல்கள் அடித்ததன் மூலம் போட்டி சமநிலையில்...
National news
அமெரிக்க, இந்திய தூதுவர்கள் அவசரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு
புதினம் -
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை அடுத்து, இலங்கைக்கான அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள் அவசரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துள்ளனர். இரண்டு தூதுவர்களும் தனித்தனியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி செயலகத்திலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்காவை அலரி மாளிகையிலும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
Soccer
ஆங்கில பிரீமியர் லீக், செல்ஸீ அணி ஆறுதல் வெற்றி
புதினம் -
இன்று (13/02) இங்கிலாந்தில் நடைபெற்ற ஆங்கில பிரீமியர் லீக் கிண்ணத்திற்கான போட்டியில், செல்ஸீ அணி வெஸ்ட் ப்ரொம்விச் அல்பியன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அணியின் முன்னணி வீரர்களான ஈடன் ஹாஸார்ட் இரண்டு கோல்களையும் மற்றும் விக்டர் மோசஸ் ஒரு கோலையும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். (படம் : செல்ஸீ ) ஆங்கில பிரீமியர்...
National news
அரசாங்கத்திற்கு மக்கள் சிவப்பு எச்சரிக்கை – ரஞ்சன் ராமநாயக்க
புதினம் -
முன்னைய அரசாங்கத்தில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு மக்கள் அரசாங்கத்திற்கு விடுத்த சிவப்பு எச்சரிக்கையே இந்த தேர்தல் முடிவாகும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள், அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தவர்கள் என எவரையும் இதுவரை இந்த அரசாங்கம்...
Articles
மொட்டு ஒன்று மலர்ந்திடத் துடிக்கும்
புதினம் -
மொத்த வாக்குகளில் 45% வரையிலான வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
National news
கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி
புதினம் -
கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை ஆசனங்களுடன் கைப்பற்றியுள்ளது. 131,353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23 ஆசனங்களையும், சுதந்திரக் கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
Local news
உள்ளூராட்சி தேர்தலில் 65% வாக்குப் பதிவு
புதினம் -
8356 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 15.8 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
