புதினம்
Cricket
ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை
புதினம் -
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி...
Local news
க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின
புதினம் -
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிட இங்கே அழுத்தவும்.
World News
வட கொரிய அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணம்
புதினம் -
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவிற்கு திடீர் விஜயம் செய்துள்ளார். 2011ஆம் ஆண்டு அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட கிம் ஜாங் உன்னின் சீன விஜயத்தை, சீனா மற்றும் வட கொரியா நாடுகள் உறுதி செய்துள்ளன.
National news
மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி
புதினம் -
மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி இடம்பெறுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளிற்கிணங்க இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. 29ம் திகதி (29/04) வெசாக் பூரணை தினம் வருவதால், மகாநாயக்க தேரர்கள் மேதின திகதி மாற்ற வேண்டுகோளை விடுத்திருந்தனர்.
Tamil Nadu News
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள்
புதினம் -
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் தற்போது தூத்துக்குடி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களும் குதித்துள்ளதால் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி கல்லூரி மாணவர்களையடுத்து மேலும் பல கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்க சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உற்பட பலவித...
Local news
யாழ்.மாநகர சபை மேயராக ஆர்னோல்ட்
புதினம் -
யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயரைத் தெரிவு செய்வதற்கான இன்றைய (26/03) கூட்டத்தில் இ.ஆர்னோல்ட் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். மேயரைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். ஈ.பி.டி.பி சார்பாக போட்டியிட்ட ரெமிடியஸ் 13 வாக்குகளையும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக போட்டியிட்ட வி.மணிவண்ணன் 13 வாக்குகளையும் பெற்றனர்.
World News
ரஷ்ய தீ விபத்தில் 37பேர் பலி, 41 சிறுவர்கள் உட்பட 64 பேரை காணவில்லை
புதினம் -
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து 3600km தூரத்தில் உள்ள கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 37 பேர் பலியாகியுள்ளனர். 41 சிறுவர்கள் உட்பட 64பேர் காணாமல் போயுள்ளனர். இழப்புக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Local news
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் விடுதலைப் புலிகள் வெளியேற்றம்
புதினம் -
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச்செய்து, தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதே இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.
Local news
சங்கானை குருக்கள் கொலை வழக்கு, இராணுவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
புதினம் -
குருக்களின் கொலையின் பின்னர், சங்கானை முருக மூர்த்தி ஆலயத்திற்கு அருகில் இலங்கை இராணுவம் நிரந்தரமாக ஒரு முகாமை அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Local news
சர்வதேச விசேட நீதிமன்றம் அவசியம் – ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்
புதினம் -
சர்வதேச பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி இவ்விடயங்களை ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச நியாயாதிக்கம் என்ற மாற்றுவழியை ஆராயுமாறு உறுப்புநாடுகளை கோருவோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசென் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று நடைபெற்ற இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்த...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
