புதினம்

சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீன அரசின் அழைப்பின் பெயரில் சீனா சென்றுள்ளதாக தெரியவருகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, இலங்கை சுதந்திரக்கட்சியின் சில அதிகாரிகளையும் அழைத்துள்ள சீன அரசு, கோத்தபாய ராஜபக்ச மற்றும் சுதந்திரக்கட்சி அதிகாரிகளுக்கிடையிலான ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை ஒழுங்கு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அரசின் இந்த நடவடிக்கை 2020இல் கோத்தபாய ராஜபக்சவை...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிப்பு

கூட்டு எதிர்கட்சியினால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 126 பேர் வாக்களித்திருந்ததுடன் 76 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். 26 பேர் அவையில் சமூகமளித்திருக்கவில்லை.

தமிழர் பிரதேசங்களுக்கு தமிழர்களை அரச அதிபர்களாக நியமியுங்கள் – சுமந்திரன்

தமிழர் பிரதேசங்களுக்கு அரச அதிபர்களாக ஏன் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு சிங்களவர்கள் அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் எப்படி வேலைகளை வினைத்திறனுடன் செய்ய முடியுமெனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் யாழ்ப்பாணத்தில் அரச அலுவலகங்களில்...

யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா காவல்துறையினர், கைதுசெய்யப்பட்டவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர். ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி...

கொழும்பு மா நகரசபை கணனி மயப்படுத்தப்படவுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் வசமுள்ள கொழும்பு மா நகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் யாவும் கணனி மயப்படுத்தப்படுகிறது. மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி, அரச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பன இணைந்து இந்த கணனி மயப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்கின்றன.  

சம்பந்தனுக்கு அத்துரலிய தேரர் கடிதம்

ரணில் விக்கிரமசிங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தனிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு புகையிரத சேவையில் பாரபட்சம் – பா.உ ஸ்ரீதரன் குற்றச்சாட்டு

இலங்கையிலேயே அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் யாழ் புகையிரத சேவையில் பாரபட்சம் காட்டப்படுவதாக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார். தூர இடங்களுக்கான புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இருப்பது வழமை. இருப்பினும் யாழ் புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்கிறது – ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில்...

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குங்கள் – மங்கள வேண்டுகோள்

யாழ். மாவட்­டச் செய­ல­கத்­தில் வர்த்­தக சமூ­கத்­தி­னர், கூட்­டு­ற­வுத் துறை­யி­னர், வங்­கித் துறை­யி­னர் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கு தொழில் வாய்ப்பை வழங்­கு­மாறு கூட்­டு­ற­வுத்­து­றை­யி­னர் மற்­றும் வர்த்­த­கர்­க­ளி­டம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவ்வாறு முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும்பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 50 வீதத்தை நிதி அமைச்சு தொழில் வழங்குனருக்கு...

60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா

ரஷ்யா, தனது நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளதுடன், 60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளையும் வெளியேறுமாறு பணித்துள்ளது.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img