புதினம்

அல்ஜீரிய இராணுவ விமானம் விபத்து, 257 பேர் பலி

அல்ஜீரியாவில் இடம்பெற்ற இராணுவ விமானம் விபத்தில் 257 பேர்  பலியாகியுள்ளனர். விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சோவியத் தயாரிப்பான IL-76 விமானமே விபத்திற்குள்ளானது.

எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும் – முதல்வர் விக்னேஸ்வரன்

முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள கேள்வி பதில் அறிக்கை எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன். ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம்...

வட மாகாண சபையின் மூன்று அமைச்சர்களின் மோசடி அம்பலம்

வட மாகாண சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக தாம் தகவல்களைப் பெற்றுள்ளதாக உதயன் பத்திரிகை தெரிவித்துள்ளது. முழுமையான செய்தியைப் படிக்க இங்கே அழுத்தவும்.

பயங்கரவாதிகளின் 1.2 மில்லியன் ட்விட்டர் ​கணக்குகள் முடக்கம்

2015 ஆகஸ்ட் மதத்திலிருந்து 2017 டிசம்பர்வரை பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் தகவல்களை பரப்பும் 1.2 மில்லியன் ட்விட்டர் ​கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றில் 74% கணக்குகள் அவற்றின் முதலாவது பதிவு இடமுன்னரே இடமுன்னரே சிறப்பான உள்ளக தொழில்நுட்பம் மூலம் முடக்கப்பட்டுள்ளது அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி

மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?

சிரியாவில் மீண்டும் நச்சு வாயு தாக்குதல் 70பேர் பலி

சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 100 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானபோதும் அதனை உறுதி செய்ய முடியவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் கண்டனத்தை...

ரஜினிகாந்தின் எதிரிகள்

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுத்தால் அதை எதிர்ப்பேன் என்று கமல் கூறியது தொடர்பாக ரஜினியிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு கீழ்வருமாறு ரஜினிகாந்த் பதிலளித்தார். "கமல் எனக்கு எதிரி இல்லை. அவரை நான் எதிர்க்கப்போவதும் இல்லை. ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை ஆகியவைதான் என்னுடைய எதிர்கள். நிறைய பேசுவதால் எதிரிகள்தான்...

கோத்தபாயவின் நெருங்கிய சகாவான முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கைது

"நேஷன்" பத்திரிகையின்ஆசிரியராக செயற்பட்ட கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கருணாசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கருணாசேகரவிற்கு, இராணுவத்தின் மூன்றாவது உயர் பதவியான மேஜர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டிருந்தது. மஹிந்த...

யாழிலிருந்து கொழும்பு சென்ற வாகனத்தில் 220kg கஞ்சா மீட்பு

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனத்தில் இருந்து 220kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வாகனம் சிலாபம் பகுதியில் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தில் இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் யாழ் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆரம்ப கட்ட விசாரணைகளில், கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதான...

வீடும் வீணையும்

கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (வீடு), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி/வீணை) போன்ற தமிழ் அமைப்புக்கள் பெரும்பாலான வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் எந்த ஒரு சபையிலும் அவர்களால் தனித்து ஆட்சி அமைக்கும் நிலையைப் பெற்றிருக்க முடியவில்லை. இதனால் பெரும்பாலான சபைகளில் ஈபிடிபியின் ஆதரவுடன்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img