க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி

கடந்த 2017ம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில், மாகாணரீதியாக வட மாகா­ணம் தொடர்ந்­தும் கடைசி இடத்­தி­லேயே அதாவது ஒன்பதாவது இடத்­தி­லேயே உள்­ளது. கிழக்கு மாகா­ணம் எட்டாவது இடத்­தில் உள்­ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வித் தரத்தில் கடைசி இரு இடங்களில் இருப்பது மிகவும் வேதனை தரும் ஒரு விடயமாகும்.

அகில இலங்கைரீதியில் வட மாகாண மாவட்டங்களின் நிலை பின்வருமாறு,

  • மன்­னார் – 12ம் இடம்
  • வவுனியா – 18ம் இடம்
  • யாழ்ப்பாணம் – 19ம் இடம்
  • முல்லைத்தீவு – 24ம் இடம்
  • கிளிநொச்சி – 25ம் இடம்
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகப்போகிறது. மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?

 

Latest articles

Similar articles