புதினம்

இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாய எச்சரிக்கை, நாவலப்பிட்டி நகரில் கடும் வெள்ளம்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து

வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, யாழ் பிராந்திய காவல்நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினரின் விடுமுறைகள் யாவும் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க வட கொரிய – தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு

கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

புதிய வடிவமைப்புடன் Gmail

Google நிறுவனம் மிக நீண்ட காலத்தில் பின்னர் தமது பிரபல்யமான மின்னச்சலான ஜிமெயிலின் (Gmail) வடிவமைப்பில் பாரிய மாற்றங்களை செய்துள்ளது. புதிய ஜிமெயில் வடிமைப்பைப் பெற சக்கர வடிவில்  அமைந்துள்ள செட்டிங்ஸில் கிளிக் செய்து , "Try the new Gmail" என்பதை கிளிக் செய்தால் புதிய வடிவமைப்புடன் Gmail இனைப் பெறலாம். "Try the new...

‘ஒபேரா டச்’ உலாவி (browser)

கைப்பேசிகளில் ஒரு கையால் இலகுவாக இணைய தளங்களைப் பார்வையிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனைகள் யாவும் நிறுத்தம் – வடகொரியா

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலக்காகவும் கொண்டு இந்த முடிவை வடகொரிய அதிபர் எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கர வண்டி ஓட்ட முடியாது !!

இலங்கையில் பெருமளவு இளவயது ( 35 வயதிற்கும் குறைவான ) முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் கூட்டாக சிரியா மீது ஏவுகணை மற்றும் விமான தாக்குதல்

110ற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அதில் பலவற்றை தாம் இடை மறித்துள்ளதாகவும் சிரியா தெரிவித்துள்ளது

இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த 24kg தங்கம் மீட்பு, மூவர் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 24.2kg நிறையுடைய 242 தங்க கட்டிகளை கடத்த முற்பட்ட மூவரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும், கைப்பற்றப்பட்ட தங்கமும் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண சுங்க பிரிவினரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 170 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகும் 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்

இவர்கள் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் அங்கம் வகித்திருந்ததுடன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img