புதினம்
Local news
காவல்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டது
புதினம் -
இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நேற்று (21/04) நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் விளைவாக அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு இன்று காலை ஆறு மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது. நாடு மீண்டும் வழமையான செயற்பாடுகளுக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புகையிரத நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் பாரிய சோதனைகள் இடம்பெற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 215 மனித உயிர்களைக்...
National news
இலங்கை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஏழு பேர் கைது
புதினம் -
இலங்கையில் இன்று (21/04) கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் இதுவரை (இலங்கை நேரப்படி மாலை 5:30வரை) 215பேர் உயிரிழந்துள்ளதுடன், 450பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.இதில் மூன்று இலங்கை காவல்துறை உத்தியோகத்தர்களும், 27 வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவர். இந்த திட்டமிடப்பட்ட கொடூர தாக்குதல்கள் தொடர்பாக ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்...
National news
நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு, சமூகவலைத்தளங்களும் முடக்கம்
புதினம் -
இலங்கையில் இடம்பெறும் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மேற்படி காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்கும்வகையில், தற்காலிகமாக சமூக வலைத்தளங்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
National news
தெமட்டகொட, தெஹிவளை பகுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு
புதினம் -
கொழும்பு மாவட்டம் தெஹிவளை மற்றும் தெமட்டகொட பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தெஹிவளை பகுதியில் ஒரு விடுதியில் ஒரு விடுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை தெமட்டகொட பகுதியில் மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இலங்கை காவல்துறை உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
National news
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
புதினம் -
இன்று (21/04) இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் எதிரொலியாக, இலங்கையின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பயணிகள் பயண நேரத்திலிருந்து குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு சமூகமளிக்கும்படியும் கேட்கப்பட்டுள்ளனர்.
Local news
அவசரமாக இரத்தம் தேவை – இலங்கை இரத்த வங்கி
புதினம் -
இலங்கையில் இன்று(21/04) இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் காயமடைந்துமுள்ளனர். காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக இலங்கை இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் கொழும்பில் நாரஹேன்பிட்டி, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலனறுவை பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் இரத்ததானம் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
National news
கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு தேவாலயங்களில் பல குண்டு வெடிப்புகள், 215ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
புதினம் -
இன்று (21/04/19) காலை இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 215ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 450 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை கொழும்பிலுள்ள மூன்று ஐந்து-நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன. உயிரிழந்தவர்களில் 27 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.இந்த நாசகார செயல் தொடர்பாக இலங்கை இராணுவம்...
Local news
இலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – ஆஸ்திரேலியா
புதினம் -
2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலியாவிற்கான தூதுவர் திரு.ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலியாவின் போர்க்கப்பல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட திரு.ஜோன் பிலிப் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை படையினருடன் சேர்ந்து போர்ப்பயிற்சிகளில்...
Local news
யாழ் மேயர் உட்பட தமிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து !!!
புதினம் -
எம் மூவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு சுமந்திரன் அவர்கள் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
National news
36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம்
புதினம் -
ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தாய்வான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள், வரும் மே மாதம் முதலாம் திகதி (01/05/2019) முதல் ஆறு மாதங்களுக்கு விசா எடுக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். மேற்குறித்த நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
